வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 56 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

குறித்த பாடசாலையிலிருந்து 176 பேர் இம்முறை பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக கல்லூரியின் அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தெரிவித்தார்.

20 மாணவிகள் 8 ஏ சித்திகளையும், 17 மாணவிகள் 7 ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வருடம் வெளியான சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி இப்பாடசாலையிலிருந்து 46 மாணவிகள் ஏ சித்தி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version