யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில், இன்றைய தினம் சனிக்கிழமை (02) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்தோடு, இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.
விற்பனை நிறுவனம் ஒன்றின் பட்டா ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், மற்றையவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version