ரோம்: நாம் 19 வயதில் கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருப்போம். ஆனால், இந்த நபர் 19 வயதிலேயே உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார். யார் அவர்?

எப்படி அவரால் குறுகிய காலத்தில் பணத்தைக் குவிக்க முடிந்தது என்பதைப் பார்க்கலாம். பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டும் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் பிரான்ஸை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், எலான் மஸ்க், ஜெப் பேசாஸ் (அமேசான்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்தியாவில் இருந்து முகேஷ் அம்பானி 9ஆவது இடத்தில் இருக்கிறார்.

கோடீஸ்வரர்: இருப்பினும், அனைவரையும் தாண்டி இந்த லிஸ்டில் இருக்கும் கிளெமெண்டே டெல் வெச்சியோ என்பவர் மீதே அனைவரது பார்வையும் சென்றது.

ஏனென்றால், அவருக்கு வயது வெறும் 19 தான். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இந்த டீன் ஏஜ் இளைஞர் லிஸ்ட்டில் 818ஆவது இடத்தில் இருக்கிறார்.

இவரது சொத்து மதிப்பு 3.5 பில்லியன், அதாவது 29 ஆயிரம் கோடியாகும். உலகின் மிகப்பெரிய கண் கண்ணாடி நிறுவனமான எஸ்சிலர் லக்சோட்டிகாவின் தலைவராக இருந்தவர் இத்தாலிய கோடீஸ்வரர், லியோனார்டோ டெல் வெச்சியோ.

இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 87 வயதில் உயிரிழந்தார். அப்போது அவரது சொத்து மதிப்பு $25.5 பில்லியன், அதாவது 2.1 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இந்த சொத்து அவரது மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுக்குச் சென்றது. அப்படித்தான் 2022இல் இந்த கிளெமெண்டே டெல் வெச்சியோ கோடீஸ்வரர் லிஸ்டிற்குள் வந்தார்.

படிப்பில் கவனம்: கிளெமெண்டே டெல் வெச்சியோ வெறும் 18 வயதில் பெரும் கோடீஸ்வரர் ஆனார். அவர் தனது தந்தையின் டெல்ஃபினில் நிறுவனத்தின் 12.5% ​ பங்குகளை பெற்றுள்ளார். என்ன தான் பல கோடி ரூபாய் சொத்துடன் கோடீஸ்வரர் லிஸ்டில் அவர் இடம் பிடித்திருந்தாலும்

அவருக்கு இப்போது இவை எதிலும் ஆர்வம் இல்லையாம். இப்போது அவர் படிப்பில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்பாக அவருக்கு சயின்ஸ் மற்றும் டெக்னாலஜியில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. கல்லூரியில் சேர்ந்து இதில் முறையாகப் பட்டம் பெற வேண்டும் என்பதே இவரது திட்டமாக இருக்கிறது.

செல்வாக்கு இருக்கு: மேலும், இத்தாலியில் இருக்கும் பல விலையுயர்ந்த சொகுசு பங்களாக்களும் க்ளெமெண்டே டெல் வெச்சியோ பெயரில் இருக்கிறது. மேலும், அவரது தந்தையின் நிறுவனத்தின் மூலம் சன்கிளாஸ் ஹட் மற்றும் ரே-பான் போன்ற முக்கிய பிராண்டுகளிலும் இவருக்குச் செல்வாக்கு இருக்கிறது.

இப்படி உலகின் டாப் பிராண்டுகளிலும் செல்வாக்கு இருக்கும் போதிலும், கிளெமெண்டே சைலெண்டாகவே இருக்கிறார்.

மேலும், அவரது தந்தையின் பிஸ்னஸ்களில் நேரடியாக ஈடுபடுவதில்லையாம். அமைதியாகத் தான் உண்டு தனது படிப்பு உண்டு என்றே இருக்கிறார்.

இவர் மட்டுமின்றி இவரது குடும்பத்தில் அனைவருமே வேற லெவல்தான். மூத்த சகோதரர் கிளாடியோவுக்கு 25 வயது இருக்கும் போது, அவரது தந்தை அமெரிக்காவுக்கு அனுப்பினார்.

அங்கே 15 ஆண்டுகள் லக்சோட்டிகா என்ற நிறுவனத்தை அவர் நடத்தி வந்தார். இந்த காலகட்டத்தில் பல டாப் நிறுவனங்களையும் அவர் கையகப்படுத்தினார். அதேபோல இவரது இரண்டாவது மூத்த சகோதரர் லியோனார்டோ மரியாவும் பிஸ்னஸை தான் கவனித்து வருகிறார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version