புத்தளம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்கும் மூன்று மாணவிகள் மற்றும் ஒரு மாணவனிடம் கையடக்க தொலைபேசியில் ஆபாச காட்சிகளை காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் குறித்த பாடசாலையில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் புத்தளம் – லுணுவில பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பாடசாலை அதிபர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் மாணவர்களிடம் ஆபாச காட்சிகளை காண்பிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கையடக்க தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுபப்பட்டுள்ள நிலையில் இதனையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version