யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த வாகனமும் புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வேன் ஒன்றில் சென்ற இனந்தெரியாத குழுவினர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனையடுத்து, குறித்த குழுவினர் தங்களது வாகனத்தில் மருதனார்மடம் நோக்கி தப்பிச் செல்லும் போது மல்லாகம் பகுதியில் வைத்து வாகனத்துக்கு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருந்தனர்.

இந்தநிலையில், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய குறித்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த 28 வயதான இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version