சீதுவை – லியனகேமுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் இறுதி சடங்கு வீடு ஒன்றில் கலந்து கொண்டு ஒருவரை வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லியனகேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபராவார்.

இவர் லியனகேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதி சடங்கு வீடு ஒன்றில் கலந்து கொண்ட போதே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை தனிப்பட்ட நோக்கத்திற்காக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version