தென்கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களிடமிருந்து பணம் மோசடி செய்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது 44 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் இருந்து, 5 இலட்சம் ரூபா முதல் 20 இலட்சம் ரூபா வரை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version