பௌத்த தேரர்களின் ஒருங்கிணைவில் உருவாகியுள்ள சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய தரப்பினர், திங்கட்கிழமையும் (10) மறுநாள் செவ்வாய்கிழமையும் (11) முக்கிய சந்திப்புக்களில் பங்கேற்கவுள்ளனர்.

குறிப்பாக, திங்கட்கிழமை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பற்றிக், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநயக்க ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர்.

அத்தோடு கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் அனைத்து தமிழ் உறுப்பினர்களையும் ஒன்றாகச் சந்திக்கவுள்ளனர்.

எனினும், இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன பங்கேற்பது இச்செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

தொடர்ந்து, இலங்கைக்கான அமெரிக்கதூதுவர் ஜுலி சங் இந்திய உயஸ்ர்தானிகர் , கோபால் பாக்லே, சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவொல்ட் உள்ளிட்டவர்களையும், பாராளுமன்றத்தில் குழு அறை இரண்டில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்.ராம்-Virakesari

Share.
Leave A Reply

Exit mobile version