தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு தாயுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், தனது காதலன் என கூறிக்கொண்ட இளைஞனால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட மாணவியின் தாயை தாக்கி விட்டே மாணவியைக் கடத்தி சென்றதாக முறைப்பாடு செய்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி, மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்புக்கு ஒன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முச்சக்கரவண்டியில் மற்றுமொரு நபருடன் வந்த சந்தேக நபர் மாணவிளைக் கடத்திச் சென்றதாக அவரின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது மாணவி கடத்தப்பட்ட முச்சக்கரவண்டியில் தாய் ஏற முற்பட்டதையடுத்து சந்தேகநபர் அவரை உதைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றர்.

Share.
Leave A Reply

Exit mobile version