உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள்.

குறிப்பாக அமெரிக்கா இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 617 கோடி) வரை நிதி உதவி செய்திருக்கிறது.

எனினும், ரஷியா தொடர்ந்து உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனைக் கொண்டுவர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைனில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரம் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே மேலும் படைகளை அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை.

எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என தெரிவித்தார்.

அதிபராக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புதின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.”,

 

Share.
Leave A Reply

Exit mobile version