இந்தியாவில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.

கேரளாவில் நேற்று 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,144 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கேரளாவில் தற்போது பரவும் கொரோனா தொற்றினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் முதல்முறையாக ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால், பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version