காலி – கராப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 31 வைத்தியர்களின் வீடுகளில் கொள்ளையிட்டு விளக்கமறியலில் இருந்தவர் முப்பத்திரெண்டாவது முறையும் வீடொன்றில் கொள்ளையிட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக சட்டத்தரணி ஒருவரின் வீடொன்றினுள் நுழைந்து 20 இலட்சத்து 6 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைளை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இவர் கொள்ளையிட்ட பொருட்களை காலி பிரதேசத்திலுள்ள நகைக்கடையொன்றில் விற்பனை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கராப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.