அம்பலாங்கொடை பகுதியில் இன்று (17) அதிகாலை 2 லொறிகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் விபத்துக்குள்ளான லொறியொன்றின் சாரதி எனவும் அவர் மெட்டியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version