வடகாசாவில் உள்ள மருத்துவமனையொன்றின் நோயாளிகளை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி நசுக்கிகொலை செய்தனர் என வெளியானகுற்றச்சாட்டுகள் குறித்து பாலஸ்தீன அதிகார சபை விசாரணைகளை கோரியுள்ளது.
வடகாசாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனைக்குஅருகில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்தனர் இதன்போது நோயாளிகள் உட்பட பொதுமக்களை கொலை செய்தனர் என வைத்தியர்களும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் குறிப்பிட்டனர்.
பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டனர் புல்டோசர்களை பயன்படுத்திபொதுமக்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள ஒருவர் இதனை யார் செய்வார்கள் இந்த குற்றங்களை இழைத்தவர்கள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்தவேண்டும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கமால் அட்வான் மருத்துவமனைக்கு அருகில் கட்டிட இடிபாடுகளிற்குள் பலர் உயிரிழந்த நிலையில் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையின் பெருமளவு பகுதியை புல்டோசர்கள் இடித்துதரைமட்டமாக்கியுள்ளன என தெரிவித்துள்ள அல்ஜசீராவின் செய்தியாளர் மக்கள் தங்கள் கூடாரங்களிற்குள் வைத்து புல்டோசர்களால் நசுக்கிகொல்லப்பட்டனர் 20 பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.