ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

அத்தோடு இஸ்ரேல் இராணுவம் 1000 பேரை பிடித்து வைத்துள்ளது. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கைகளை தூக்கினால் நாங்கள் அவர்களை கைது செய்வோம். நாங்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தமாட்டோம் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சுரங்கப்பாதையை கண்டு பிடித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

எராஸ் எல்லைப் பகுதியில் இந்த சுரங்கப்பாதையை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்துள்ளது. சிறிய வகை வாகனம் செல்லும் வகையில் மிகப்பெரியதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version