இந்தியாவால் அதிகம் தேடப்படும் பாதளஉலகதலைவர் தாவூத் இப்ராஹிம் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பாய் குண்டுவெடிப்பு சூத்திரதாரி தாவுத் இப்ராஹிம் நஞ்சூட்டப்பட்டதால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நஞ்சூட்டப்பட்டமை தெரியவந்ததும் அவர் அவசரஅவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு அவர் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின்றன.

பாக்கிஸ்தானின் கராச்சி மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார் என நம்பகதன்மை மிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன என இந்தியாவின் ஏபிபீ லைவ் தெரிவித்துள்ளது.

எனினும் இதுவரை இதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இந்தியாவில் அதிகம் தேடப்பட்டு வந்த தாவூத் இப்ராஹிம் கராச்சியில் பல வருடங்களாக வசித்துவந்தார்.

இதேவேளை பாக்கிஸ்தானில் இணையச்சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தாவுத்இப்ராஹிமின் மரணச்செய்தியை மறைப்பதற்காகவே இணையச்சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதேவேளை பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் அர்சூ கஸ்மி சமூக ஊடகங்கள்முடக்கத்தின் மூலம் முக்கிய சம்பவமொன்றை மூடிமறைக்க முயற்சி இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்,தாவூத் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version