யாழ்ப்பாணத்தில் கடந்த 3 நாள்கள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், வைத்திய அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாகக் காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டனர்.

அதன்போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 70 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version