யாழ்ப்பாணத்தில் வட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதானவர்களில் இருவரை பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணையின் போது சந்தேகநபர்கள் வட்ஸ் செயலி ஊடாக மாணவர்களுடன் தொடர்புகளை பேணி , போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அந்நிலையில் சந்தேகநபர்களின் தொலைபேசிகளை பறிமுதல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பல மாணவர்கள் இவர்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ள நிலையில் அவர்களை இனம் காணும் நடவடிக்கையையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Share.
Leave A Reply

Exit mobile version