யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய வியாழக்கிழமை (21) தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது வீட்டில் இருந்து நான்கு வாள்களும் சட்டவிரோதமான சிகரெட் பெட்டிகளுகளும் மீட்கப்பட்டது.

உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 38 வயதான சந்தேக நபரொருவரும் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக நடவடிக்கைக்காக நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version