காசாவின் அல்மக்காசி அகதி முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 70க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கிறிஸ்மஸ் தினத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் பெருமளவு மக்கள் வசிப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

காயமடைந்த பலர் அருகில் உள்ள அல் அக்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகத்தில் இரத்தத்துடன் காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மூன்று வீடுகளிற்கு மேல் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகளவு மக்கள் வசித்த குடியிருப்பு பகுதி அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது மகளையும் பேரப்பிள்ளையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ள ஒருவர் தாங்கள் காசாவிலிருந்து தப்பிவெளியேறியவர்கள் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் அழிக்கப்பட்ட கட்டிடமொன்றின் மூன்றாம் மாடியில் வசித்தனர் கட்டிடம் முற்றாக இடிந்து விழுந்ததில் அவர்கள் அனைவரும் எனது பேரப்பிள்ளைகள் மகள் கணவர் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அனைவரும் இலக்குவைக்கப்படுகின்றோம் பொதுமக்கள் அனைவரும் இலக்குவைக்கப்படுகின்றனர் பாதுகாப்பான இடம் இல்லை எங்களை காசாவிலிருந்து வெளியேற சொன்னார்கள் நாங்கள் மத்திய காசாவிற்கு வந்து உயிரிழக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version