அடுத்ததாக எழுந்த விக்ரம். “ஆக்டிங்தான் சார். சினிமாதான் என் கனவு. ஆனா சொல்லலாமான்னு தெரியல. உங்களைத் தாண்டி போகணும்” என்று அவர் சொன்ன அடுத்த கணமே “நீங்க சொல்லலைன்னா யாரு சொல்வாங்க?” என்று ஊக்கம் தந்தார் கமல்.

விக்ரம் வெளியேற்றப்பட்டார். சண்டையில் கலந்து கொள்ளாதவர். அதிகம் சண்டையில் ஈடுபடாதவர். யார் மனம் புண்பட்டாலும் உடனே முன்சென்று ஆறுதல் சொல்பவர். உண்மையான நட்புணர்ச்சியைக் காட்டியவர். டைட்டில் கனவு கொண்டிருந்தவர். ஆனாலும் விக்ரம் எவிக்ட் ஆனார்.

ஒருவர் நற்பண்புகளைக் கொண்டு அமைதியைக் கடைப்பிடித்தால் அவரை நாம் பலவீனமானவராக, கிரிஞ்ச் ஆசாமியாக பார்க்கிறோமோ என்கிற சந்தேகத்தை பிக் பாஸ் எவிக்ஷன்கள் தொடர்ந்து நிரூபிக்கின்றன.

ஆனால் ஒருவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. அதனுடன் ஆட்டத்தைப் புரிந்து கொண்ட வல்லவராகவும் இருக்க வேண்டும். விக்ரமின் பெரிய பலவீனமே தன் தனித்தன்மையை இழந்து கூட்டத்தில் கரைந்து போனதுதான். நற்பண்புகளை இழக்காமல் தனியாக நின்று ஆடியிருந்தால் ஒருவேளை அவரது கனவு பலித்திருக்கக்கூடும்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 24-12-2023 Vijay Tv Show- வீடியோ

Bigg Boss 7 Day 83: ரவீனாவின் அம்மாவைப் பார்த்து அலறிய மணி; FDFS ரசிகர்களைக் கலாய்த்த கமல்!

Share.
Leave A Reply

Exit mobile version