‘யுக்திய’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து, கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் பாதாள உலக பிரமுகர் ஹீனடியான மகேஷின் கூட்டாளி ஒருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்த போது, அவரிடம் 9எம்எம் ரக துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்கள் இருந்தன.
பொலிஸாரின் மேலதிக விசாரணையில், அவர் ஹீனடியான மகேஷின் கூட்டாளி என்பதும், இரண்டு தொழிலதிபர்களின் கொலைகளை செய்வதற்கு ஒப்பந்தம் செய்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்கோன் தலைமையில் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.