அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிவிக்கவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த, விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அனைத்து கட்சிகளிடம் இருந்தும் கோரிக்கைகள் கிடைக்கப்பெறுமாயின், தாம் போட்டியிட தயார் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version