மாத்தறை,வெலிகம பிரதேசத்தில் கைத்தொலைபேசி தொடர்பாக தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக 16 வயது சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியாவார்.

கடந்த 25 ஆம் திகதி இவரது தந்தை வேலை முடித்து வீடு திரும்பிய பின்னர் கைத்தொலைபேசி தொடர்பில் மகளிடம் விசாரித்துள்ளார். இதன் போது தாய் கைத்தொலைபேசியை எடுத்துச் சென்றுள்ளதாக சிறுமி தந்தையிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பில் விசாரிக்க தாயின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து சோதனையிட்ட போது கைத்தொலைபேசி மகளின் அறையில் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து தந்தை கைத்தொலைபேசியை தரையில் வீசி உடைத்துள்ளார்.

இதனால் தந்தையுடன் மகளுக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகள் அறைக்குள் சென்று கதவை மூடி அறைக்குள் தற்கொலை செய்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் தாயிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது;

எனது மகள் மிகவும் அறிவானவள், அழகானவள் இந்த சம்பவம் இடம்பெறும் போது நான் வீட்டில் இருக்கவில்லை இருந்திருந்தால் இவ்வாறு இடம்பெற்றிருக்க விட்டிருக்க மாட்டேன்.

எனது கணவர் மிகவும் கோபமுடையவர் என்னையும் தினமும் அடித்து கொடுமை செய்வார். இருப்பினும் எனது மூன்று பிள்ளைகளுக்காக தான் நான் பொறுத்துக்கொண்டேன்.

அவர் எனது மகளை வகுப்புகளுக்கு கூட அனுப்புவது இல்ல வீட்டிலேயே அடைத்து வைத்துக்கொண்டிருப்பார். இந்த சம்பவத்தின் போதும் அவர் மகளை அடித்து திட்டியுள்ளார். இத்தகைய மன உளைச்சலுக்கு உள்ளானதால் தான் எனது மகள் தற்கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version