யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஆலயமொன்றில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்தவர் உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறைச் சேர்ந்த சி.இராசரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு தினமும் சென்று தேவாரம் ஓதி வரும் நிலையில் நேற்று புதன்கிழமையும் வழமை போன்று ஆலயத்திற்கு சென்று தேவாரம் ஓதிக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார்,

அதனையடுத்து அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version