யாழ். கைதடி ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர் பாரிச வாதம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை பராமரிப்பதற்கு ஒருவர் 2,500 ரூபா சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த முதியவர் மீது நேற்று வெள்ளிக்கிழமை அந்த பராமரிப்பாளர் தாக்குதல் நடாத்தியுள்ளார். இந்நிலையில் அந்த முதியவரை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version