ஆப்கானிஸ்தானில் அரை மணிநேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பைசாபாத் மாகாணத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் 80 கி.மீ. ஆழத்தில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து, பைசாபாத் மாகாணத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் 140 கி.மீ. ஆழத்தில் நள்ளிரவு 12.55 மணிக்கு 4.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்களும், வீடுகளும் குலுங்கியதால் மக்கள் அலறியடைத்து வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 1-ஆம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version