யுக்திய நடவடிக்கையின் போது சுகவீனமுற்ற மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தாய் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணாவார்.
இவர் நம்பப்பன பிரதேசத்தில் தனது 11 வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இங்கிரிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,250 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து 8 கையடக்க் தொலைபேசிகளும் போதைப்பொருள் விற்பனையில் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பெண் 37 வயதுடைய நபரொருவரிடத்திலிருந்து ஹெரோயின் போதைப்பொருளை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் 2,180 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட தாயும் மகளும் ஹொரணை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.