காலி – வதுரம்ப பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகளால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் காலி – வதுரம்ப பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவராவார்.

மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய தனது மகளுக்கு மருந்துகளை உணவில் கலந்து கொடுக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர் மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு குறித்த தாக்குதலில் காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது வீட்டில் இருந்த தாயும் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version