மன்னம்பிட்டி – மாகந்தோட்டை பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக காணாமல்போயிருந்த ஒருவர் மரமொன்றில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர் 66 வயதுடையவராவார்.

இவர் மாகந்தோட்டை காட்டுப் பகுதியில் விறகு வெட்டச்சென்ற போது அங்கு இருந்த சிறுத்தையிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மரத்தின் மீது ஏறியுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் சூழ்ந்த வெள்ளத்தால் இரண்டு நாட்களாகியும் அவர் மரத்திலேயே தங்கியிருந்துள்ளார்.

இதனையடுத்து இவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version