புத்தளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம்- கரம்பை, தேத்தாப்பொல காமன்ட் வத்தை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (வயது 55) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சடலமாக மீட்கப்பட்ட நபரின் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், இரண்டு பிள்ளைகளையும் தானே பராமரித்து வந்துள்ளதாகவும், கடந்த முதலாம் திகதி வீட்டில் இருந்து வெளியே சென்ற குறித்த நபர், காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதுபற்றி குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில், குறித்த நபர் புதன்கிழமை (03) பிற்பகல் வடிகானுக்குள் இருந்து காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனவும் மதகுக்கு மேல் இருந்து மது அருந்திய நிலையில் இவ்வாறு மதகுக்கு கீழ் செல்லும் நீருக்குள் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version