போலி முகநுால் கணக்கின் ஊடாக விளம்பரங்களை செய்த இருவர் பெண்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சந்தேக நபர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் இவர்கள் முகநூலில் பெண் ஒருவரது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி போலி முகநூல் கணக்கின் ஊடாக குறைந்த விலைக்கு ஐ போன்கள் பெற்றுக்கொள்ள முடியும் என கூறி மாணவிகள் மற்றும் பெண்களிடம் தொடர்பில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் மாடலிங் போட்டி ஒன்று இடம்பெறுவதாக கூறி அப் போட்டியில் வெற்றி பெற்றால் ஐ போன் கையடக்கத் தொலைபேசிகள் இலவசமாக வழங்கப்படும் என குறித்த பெண்களிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பெண்களின் புகைப்படங்களை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக கூறி பெண்களிடமிருந்து பணம் பெற்றுள்ளனர்.

பணம் தராத பெண்களை குருனாகல் பிரதேசத்திற்கு வரவழைத்து அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுடன் பணப் பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளரும் தம்புள்ளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version