வட கிழக்கு ஸ்காட்லேண்டு பகுதியில் உள்ள நகரம், அபர்டீன் (Aberdeen). அபர்டீனில் வசிப்பவர் 81 வயதாகும் ஆட்ரி ஹே (Audrey Hay). சுமார் 30 வருடங்களுக்கு முன் பணியிடத்தில் இவரின் விலை உயர்ந்த கைப்பை திருடுபோயுள்ளது.
பறி போனபோது அவர் பையில் அப்போது சுமார் 200 பவுண்ட் பணம் இருந்துள்ளது.
ஆட்ரி பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார் அவர். ஆனால், பொலிஸாரின் தேடலில் கைப்பை கிடைக்கவில்லை. திருடியவன் அந்த பையை டான் நதியில் (River Don) வீசியுள்ளான்.
கடந்த செவ்வாய் அன்று மெய்சி கூட்ஸ் (Maisie Coutts) எனும் 11வயது சிறுமி தான் வளர்க்கும் நாயுடனும், பெற்றோருடனும் டான் நதிக்கரையோரமாக நடந்து சென்று சென்றுள்ளார்.
அப்போது கரை ஒதுங்கியிருந்த ஒரு பையை கண்டுள்ளார். அதில் பேனாக்கள், சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், ஆபரணங்கள், சாவி, சில மாத்திரைகள் என பல பொருட்கள் இருந்துள்ளான. அதில் இருந்த சில credit cardகள் 1993 வருடம் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளன.
அப்பையின் மேலே இருந்த சில அடையாளங்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உரிமையாளரை தேட தொடங்கியுள்ளார் குறித்த சிறுமி.
உடனே அவரை தொடர்பு கொண்டு அப்பையை அவரிடமே சேர்த்துள்ளார்.
இது குறித்து ஆட்ரி, “நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்கள் ஆகியும் அது அப்படியே உள்ளது. நான் தொலைத்த ஒரே பை இதுதான்” என அவர் தெரிவித்துள்ளார்.