யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று(05) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version