லொத்தர் சீட்டில் பணப்பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசி அழைப்புகள் மூலம் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களனி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

பொலிஸருக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 18 இலட்சம் ரூகாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரிடமிருந்து 3,420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டு ஏ.ரி.எம் அட்டை, 2 கையடக்க தொலைபேசிகள், 60 ஆயிரம் ரூபா பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மோசடிக்கு உதவியாக இருந்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் சிம்கார்ட் அட்டைகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version