காலி வீதி வேவல, பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (31) மாலை குறித்த நபரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காமையால், ஹோட்டல் நிர்வாகம் ஹிக்கடுவ பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பின்னர், பொலிஸாரும், ஹோட்டல் ஊழியர்களும் அந்த நபர் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, ​​குளியலறையில் இரத்தக் காயங்களுடன் நபர் இறந்து கிடந்தார்.

களனி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பொலிஸ் பாதுகாப்பில் அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version