யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 55 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கொழும்பை சேர்ந்த நபருக்கு இடைத்தரகாக செயற்பட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கொழும்பை சேர்ந்த முகவர் ஒருவரை அறிமுகப்படுத்தி , இடைத்தரகராக குறித்த பெண் செயற்பட்டு வந்துள்ளார்.

வெளிநாடு செல்லும் ஆசையில் குறித்த பெண்ணின் ஊடாகவும், முகவருக்கு நேரடியாகவும் பாதிக்கப்பட்ட நபர் 55 இலட்ச ரூபாயை கட்டம் கட்டமாக வழங்கியுள்ளார்.

நீண்ட காலமாகியும் தன்னை வெளிநாடு அனுப்பாததால் , கொழும்பு முகவருடன் பாதிக்கப்பட்ட இளைஞன் தொலைபேசி ஊடாக முரண்பட்டதை அடுத்து ,முகவர் இளைஞனின் தொடர்பை துண்டித்துள்ளார்.

அதனை அடுத்து இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞனுக்கும் , கொழும்பு முகவருக்கும் இடைத்தரகராக செயற்பட்ட பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை கொழும்பு முகவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் தலைமறைவாகியுள்ள முகவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version