அமெ­ரிக்க – ஐரோப்­பிய – இஸ்­ரே­லி­யர்­க­ளினால் காஸாவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் அழிவு தரும் செயற்­பா­டு­களும் பலஸ்­தீனர் மீதான இனப்­ப­டு­கொ­லையும் பொது மக்­க­ளி­டையே கோபக் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

அதே­வேளை இது தொடர்பில் அரே­பிய சர்­வா­தி­கா­ரி­களோ பெரிதும் அலட்­சிய மனோ­பா­வத்­து­ட­னேயே உள்­ளனர்.

இது அரே­பிய கொடுங்கோல் ஆட்­சி­யா­ளர்­களும் இஸ்­ரேலும் ஒரே அமெ­ரிக்க – ஐரோப்­பிய ஏகா­தி­பத்­தி­யத்தின் இரு­ வேறு பக்­கங்கள் என்­ப­தையே காட்டி நிற்­கி­றது.

அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா மற்றும் பிரான்­ஸினால் ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் அமர்த்­தப்­பட்டு பாது­காப்பும் பெற்­று­வரும் இவர்கள் அனை­வரும் சுய இருப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக தமது மேற்­கத்­திய எஜ­மா­னர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப தாம் சார்ந்த மக்­க­ளுக்­கெ­தி­ரா­கவே செயற்­பட்டு வரு­கின்­றனர்.

முழு மத்­திய கிழக்­கிலும் சுதந்­திரம் என்று இன்று எதுவும் இல்லை. மக்­களை அடக்கி ஒடுக்கி வைக்கும் கொடுங்­கோ­லர்­களை மட்­டுமே ஏற்கும் மன­நிலை கொண்ட மேற்­கத்­தேய எஜ­மா­னர்­களால் ஜன­நா­யகம், சுதந்­திரம் மற்றும் மனித உரி­மைகள் சகித்துக் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. அங்கு ஊட­கங்­களும் அரசின் கட்­டுப்­பாட்­டி­லேயே இயங்கி வரு­கின்­றன.

இச்­சர்­வா­தி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து அடி­மைப்­ப­டுத்­தப்­பட்ட தமது மக்­க­ளுக்குக் கூறப்­படும் செய்தி யாதெனில், ஒன்றில் தமது அடிச்­சு­வட்டை முழு­தாகப் பின்­தொ­டர்தல் வேண்டும் இன்றேல் சிறை­வாசம் என்­ப­தாகும்.

அங்கு இஸ்லாம் என்­பது வெறு­மனே மஸ்­ஜித்­க­ளி­னுள்­ளேயே முடக்­கப்­பட்டு உள்­ளது. இது அரே­பிய சர்­வா­தி­கா­ரிகள் தமது மக்­க­ளுக்கு வழங்கி வரு­கின்ற பொது­வான செய்­தி­யாகும்.

இந்த அடக்­கு­மு­றை­யான நெருக்­கடி மிக்க சூழலில் வாழ முடி­யாது ஆயி­ரக்­க­ணக்­கான அறி­ஞர்­களும் புத்­தி­ஜீ­வி­களும் தம் நாடு­களை விட்டுப் பிற நாடு­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்து வரு­கின்­றனர்.

ஹூஸ்னி முபா­ரக்

அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­லகும், இஸ்­ரேலும் ஜன­நா­ய­கத்தை தவி­டு­பொ­டி­யாக்­கு­வ­தற்­காக அரே­பிய சர்­வா­தி­கா­ரி­களைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

உதா­ர­ண­மாக, 2011 ஆம் ஆண்டு அரபு எழுச்­சியை அடுத்து எகிப்­திய மக்கள் முப்­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலான கெடு­பி­டி­மிக்க சர்­வா­தி­காரி ஹூஸ்னி முபா­ரக்கை தூக்­கி­யெ­றிந்­தனர்.

அறு­பது ஆண்­டு­க­ளுக்குப் பின் நடந்த சுதந்­தி­ர­மான, நியா­ய­மான தேர்­தல்­க­ளி­னூ­டாக இஸ்­லா­மிய பின்­ன­ணி­யினைக் கொண்ட முஹம்மட் முர்­ஸியை மக்கள் ஜனா­தி­ப­தி­யாகத் தேர்ந்­தெ­டுத்­தனர்.

இதனால் உஷாரான மேற்­கு­லகும் இஸ்­ரேலும் இந்த ஆட்­சியை கவிழ்த்து, தனது எஜ­மா­னர்­க­ளுக்கு பணி­வுடன் சேவை செய்­யக்­கூ­டிய மற்­றொரு சர்­வா­தி­காரி அப்துல் ஃபத்தாஹ் அல் சிசியை ஆட்­சியில் அமர்த்­து­வ­தற்­காக சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு இராச்­சியம் மற்றும் குவைத் ஆகிய நாடு­களை ஈடு­ப­டுத்தி பதி­னொரு பில்­லியன் டொலர்­களை செல­வ­ழிக்க வைத்­தன.

இஸ்­ரே­லிய காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தைக் கண்­டித்து, கொலை­க­ளையும் அழி­வையும் நிறுத்தக் கோரி உல­க­ளா­விய ரீதியில் மக்­களால் போராட்­டங்கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இது கிழக்கே இந்­தோ­னே­ஷியா, மலே­ஷியா முதற்­கொண்டு ஏறக்­கு­றைய அனைத்து மேற்­கு­லகத் தலை­ந­க­ரங்­க­ளையும் உள்­ள­டக்­கி­யி­ருந்­தது.

இது போன்ற ஆர்ப்­பாட்டம் ஒன்று சியோ­னி­சத்தை எதிர்க்கும் யூதர்­களால் கூட வொஷிங்­டனில் நடத்­தப்­பட்­டது.

எனினும், மத்­திய கிழக்கில் ஆட்­சி­யி­லுள்ள கொடுங்­கோ­லர்கள் அனு­ம­திக்­காத கார­ணத்­தினால் பெரிய அள­வி­லான ஆர்ப்­பாட்­டங்கள் எதுவும் அங்கு இடம்­பெ­ற­வில்லை.

மாறாக, அக்­டோபர் 8 ஆம் திகதி முதல் நீர், உணவு மற்றும் மருந்­து­வ­கைகள் எது­வுமே இல்­லாத சூழ்­நி­லையில் பலஸ்­தீ­னர்கள் பரி­த­விக்கும் போது முன்பு சூடானில் உள்­நாட்டு நெருக்­க­டியைத் தூண்டி கிட்­டத்­தட்ட அந்­நாட்­டையே கொலைக்­க­ள­மாக மாற்­றிய ஐக்­கிய அரபு இராச்­சியம், பத்து ட்ரக்­கு­களில் புத்தம் புதிய உணவு வகை­களை இஸ்­ரே­லுக்கு அனுப்பி வைத்­தது.

இந்த இனப்­ப­டு­கொ­லை­யா­னது இது­வரை முழு­மை­யாக 2.3 மில்­லியன் பலஸ்­தீ­னர்­க­ளையும் பாதித்­துள்­ளது.

கிழக்­கயல் நாடு­க­ளி­லுள்ள பலஸ்­தீன அக­தி­க­ளுக்­கு­ரிய ஐக்­கிய நாடு­களின் நிவா­ரணப் பணி­க­ளுக்­கான முக­வ­ர­கத்தின் ஆணை­யாளர் நாய­க­மாக 2020ஆம் ஆண்டு முதல் பணி­யாற்­று­கின்ற ஜெனரல் பிலிப் லஸ்­ஸா­ரினி, பலஸ்­தீ­னர்கள் அனு­ப­விக்கும் துன்­பங்­களைப் பற்றி கூறும் போது,

‘பலர் உட­லியல், உள­வியல் ரீதி­யாக வாழ்நாள் முழு­வதும் வடுக்­களை சுமப்­பார்கள். குழந்­தைகள் உட்­பட பெரும்­பா­லானோர் ஆழ்ந்த அதிர்ச்­சிக்கு உள்­ளா­கி­யுள்­ளனர், குறிப்­பாக ஆயி­ரக்­க­ணக்­கான குழந்­தைகள் கொல்­லப்­பட்டும், ஊன­முற்றும், அனா­தை­க­ளா­கவும் ஆக்­கப்­பட்­டுள்­ளமை அதிர்ச்­சி­ய­ளிக்­கின்­றது.’

‘அவர்­களின் எதிர்­காலம் நீண்­ட­கால பாதக விளை­வு­க­ளுடன் கூடிய பேரா­பத்தில் உள்­ளது,’ காஸாவின் நெருக்­க­டி­யா­னது, ‘மனி­தா­பி­மா­ன­மற்ற மொழிப்­பி­ர­யோகம், உணவு, நீர் மற்றும் எரி­பொ­ருளை போர்க் கரு­வி­க­ளாகப் பயன்­ப­டுத்­து­கின்ற, மனி­தனால் உரு­வாக்­கப்­பட்ட பேர­ழிவு ஆகும்.’ பல­முறை கோரிக்கை விடுத்த போதிலும், காஸாவில் மக்கள் கொல்­லப்­ப­டு­வதைத் தடுக்­கவும், உணவு, மருந்து, நீர் மற்றும் தங்­கு­மிடம் ஆகி­ய­வற்றைப் பாது­காப்­பாக வழங்­க­வு­மான மனி­தா­பி­மான போர் நிறுத்தம் இன்னும் நடை­மு­றைக்கு வர­வில்லை’.

‘குளிர்­காலம் ஆரம்­பிப்­ப­தா­னது, குறிப்­பாக திறந்த வெளியில் வசிப்­ப­வர்­களின் வாழ்க்­கையை மென் மேலும் தாங்க முடி­யா­த­தாக ஆக்கும்’ என்றார்.

எமது UNRWA சக­பா­டிகள் 146 பேர் உட்­பட மருத்­து­வர்கள், பத்­தி­ரி­கை­யா­ளர்கள், உதவிப் பணி­யா­ளர்கள் மற்றும் குழந்­தை­களும் கொல்­லப்­பட்­டுள்­ளனர், யாரும் விட்­டு­வைக்­கப்­ப­ட­வில்லை’ என்று அவர் மேலும் கூறினார்.

இவ்­வ­ளவு நடந்தும் கூட அரே­பிய சர்­வா­தி­கா­ரி­களின் இத­யங்கள் உருகத் தவ­றி­விட்­டன.

சவூதி அரே­பி­யாவும், எண்ணெய் வளம் மிக்க வளை­குடா நாடு­களும் குறைந்த பட்சம் நீர், உணவு மற்றும் மருந்துப் பொருட்­க­ளை­யா­வது வழங்க வேண்டும் என்று உலக முஸ்­லிம்கள் பெரிதும் எதிர்­பார்த்­தனர். மாறாக, அவர்கள் காஸாவை ஒரு கொலைக்­க­ள­மாக மாற்ற இஸ்­ரே­லி­யர்­களின் பக்கம் சார்ந்து நின்­றார்கள்.

உல­கெங்­கிலும் உள்ள முஸ்­லிம்­களை நிரா­க­ரித்து, சவூதி அரே­பியா ரியாத்தில் 2023 டிசம்பர் 14- 16, தினங்­களில்‘MDLBEAST Soundstorm’ எனும், மத்­திய கிழக்கின் மிகப்­பெ­ரிய இசைக்­க­ளி­யாட்­டத்தை நடத்­தி­யது.

மேலும் இஸ்­லாத்தில் இருந்து தூர வில­கிய இங்­கி­லாந்­திற்­கான சவூதி தூதுவர் காலித் பின் பந்தர் அல் சௌத், ‘எனது அர­சாங்கம் ஒரு­போதும் மதத் தலை­மைத்­து­வத்­திற்கு உரிமை கோர­வில்லை’ என்றார்.

காஸாவில் இஸ்­ரே­லிய காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தை வெளிப்­ப­டை­யாக ஆத­ரிக்­கின்ற ஜேர்­மனி, பலஸ்­தீ­னர்­களை இஸ்ரேல் படு­கொலை செய்­வ­தற்கு பக்­க­ப­ல­மாக இருந்­த­தற்­கா­கவும், இஸ்­ரே­லுடன் உற­வு­களைத் தொடர ஆர்வம் கொண்­டி­ருப்­ப­தற்கும் வெகு­ம­தி­யாக சவூதி அரே­பி­யா­விற்­கான ஆயுத விநி­யோ­கத்தை மீண்டும் ஆரம்­பிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது.

1947 இல், பலஸ்­தீ­னத்­திற்­கான ஐக்­கிய நாடு­களின் பிரி­வினைத் திட்­டத்­திற்கு எதி­ராக சவூதி அரே­பியா வாக்­க­ளித்­தது.

எவ்­வா­றா­யினும், இஸ்ரேல் – சவூதி இணக்க நிலை இன்றி சவூதி ஆட்சி இரண்டு வாரங்­க­ளுக்கு மேல் நீடிக்க முடி­யாது என்று இரு தரப்பு மத்­தி­யஸ்­த­ராக பணி­யாற்­றிய முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கூறி­யது போலவே தற்­போதும் அமெ­ரிக்­கா­வுடன் இஸ்­ரே­லிய – சவூதி இயல்­பு­நி­லைக்­கான இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தைகள் நடந்து வரு­கின்­றன.

இதை உறு­திப்­ப­டுத்தும் சவுதி வெளி­யு­றவு அமைச்சர் இள­வ­ரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஜன­வரி 16 ஆம் திகதி டாவோஸில் நடந்த உலக பொரு­ளா­தார மன்றக் குழு­விடம், ‘பிராந்­திய அமைதி என்­பது இஸ்­ரே­லுக்­கான அமை­தி­யையும் உள்­ள­டக்­கி­யது என்­பதை நாங்கள் ஒப்­புக்­கொள்­கிறோம்,

ஆனால், அது பலஸ்­தீன அரசின் ஊடாக பலஸ்­தீ­னர்­க­ளுக்குக் கிடைக்கும் அமை­தியின் மூலம் மட்­டுமே சாத்­தி­ய­மாகும்’ என்றார். அவ­ரிடம், ‘அவ்­வாறு இடம்­பெற்றால் சவூதி அரே­பியா இஸ்­ரேலை ஒரு பரந்த அர­சியல் உடன்­ப­டிக்­கையின் ஒரு பகு­தி­யாக அங்­கீ­க­ரிக்­குமா?’ என வின­வப்­பட்­டது. அதற்கு அவர், ‘நிச்­ச­ய­மாக’ என்றார்.

அரபு சர்­வா­தி­கா­ரி­களின் போலித் தன்மையை அம்பலப்படுத்திய எகிப்துக்கான இஸ்ரேலின் முன்னாள் துணைத் தூதர் ரூத் வாசர்மன் லாண்டே, ‘மிட்ல் ஈஸ்ட் மொனிட்டர்ஸ்’ அமைப்பின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு இராச்சியம்;, சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகள் காஸா பிரச்சினை குறித்து முரண்பாடான கருத்துக்களைக் கொண்டுள்ளன.

இந்த நாடுகள் காஸாவில் போர்நிறுத்தத்தை வரவேற்கவில்லை என்றும், அவர்களது தனிப்பட்டதும் பொது செயற்பாடுகளும் இணங்கிப்போகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள மக்கள் இந்த போலித்தன்மையையும் துரோகத்தையும் தெளிவாக அறிந்துவைள்ளனர்.

இதன் விளைவாக அப்பிராந்தியம் முழுவதும் வெடித்துச் சிதறப் போகும் எரிமலையாய் குமுறிக் கொண்டிருக்கின்றது.

காஸா மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் மீதான அமெரிக்க – ஐரோப்பிய – இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனம் இவ் வெடிப்புக்கான ஆரம்ப தூண்டலை கொடுத்துவிடுமா என்பதே கேள்விக்குறியாகும்.

லத்தீப் பாரூக்
(தமிழில்: பிஷ்ருன் நதா மன்சூர்)

Share.
Leave A Reply

Exit mobile version