“சென்னை:தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மரணமடைந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் தினமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
விஜயகாந்த் மீது அவரது கட்சியினரும் பொது மக்களும் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மீது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் மிகுந்த பாசம் வைத்திருந்தனர். உடல் நலக்குறைவால் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வெடுத்து வந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜய காந்த்தை ஒரு தாய் போல இருந்து கவனித்துக் கொண்டார் என்றே கட்சியினர் அவரைப் பற்றி குறிப்பிடுவதுண்டு.
விஜயகாந்தால் கடைசி காலத்தில் எந்த செயலையும் தனியாக செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.
அப்போது அவருக்கு தோள் கொடுத்து துணையாக இருந்தது பிரேமலதாவும் அவரது குடும்பத்தினரும் தான்.
விஜயகாந்த் உயிருடன் இருந்த போது அவருக்கு பணி விடைகள் செய்யும் வீடியோக்களையும் இதற்கு முன்பு பிரேமலதா வெளியிட்டுள்ளார்.
விஜய காந்த்துக்கு அவர் முடிவெட்டி டை அடித்து விடும் வீடியோ ஒன்று அவரது மரணத்திற்கு பிறகும் வைரலாக பரவியது.
இப்படி விஜயகாந்தின் மீது வைத்திருந்த அன்பு, பாசம் காரணமாக அவரது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் தொடங்க இருப்பதாக பிரேமலதா அறிவித்து உள்ளார்.
விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்தின் எண்ணப்படியே பிரேமலதாவின் முயற்சியால் இந்த அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரேம லதா தனது கணவர் விஜயகாந்தின் உருவத்தை வலது கையில் டாட்டுவாக வரைந்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.டாட்டூ கலைஞர் ஒருவர் பிரேமலதாவை அமர வைத்து அவரது வலது கையில் விஜயகாந்த் சிரித்த முகத்துடன் இருக்கும் உருவத்தை வரைந்துள்ளார்.
அதனை பிரேமலதா பார்த்து ரசிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவை தே.மு.தி.க.வினரும் பொது மக்களும் தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள் இதன் மூலமாக தனது கணவர் விஜயகாந்த் மீது பிரேமலதா வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு மீண்டும் வெளிப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
“சென்னை:தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மரணமடைந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் தினமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
விஜயகாந்த் மீது அவரது கட்சியினரும் பொது மக்களும் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மீது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் மிகுந்த பாசம் வைத்திருந்தனர். உடல் நலக்குறைவால் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வெடுத்து வந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜய காந்த்தை ஒரு தாய் போல இருந்து கவனித்துக் கொண்டார் என்றே கட்சியினர் அவரைப் பற்றி குறிப்பிடுவதுண்டு.
விஜயகாந்தால் கடைசி காலத்தில் எந்த செயலையும் தனியாக செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. அப்போது அவருக்கு தோள் கொடுத்து துணையாக இருந்தது பிரேமலதாவும் அவரது குடும்பத்தினரும் தான்.
விஜயகாந்த் உயிருடன் இருந்த போது அவருக்கு பணி விடைகள் செய்யும் வீடியோக்களையும் இதற்கு முன்பு பிரேமலதா வெளியிட்டுள்ளார்.
விஜய காந்த்துக்கு அவர் முடிவெட்டி டை அடித்து விடும் வீடியோ ஒன்று அவரது மரணத்திற்கு பிறகும் வைரலாக பரவியது.
இப்படி விஜயகாந்தின் மீது வைத்திருந்த அன்பு, பாசம் காரணமாக அவரது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் தொடங்க இருப்பதாக பிரேமலதா அறிவித்து உள்ளார்.
விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்தின் எண்ணப்படியே பிரேமலதாவின் முயற்சியால் இந்த அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரேம லதா தனது கணவர் விஜயகாந்தின் உருவத்தை வலது கையில் டாட்டுவாக வரைந்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.டாட்டூ கலைஞர் ஒருவர் பிரேமலதாவை அமர வைத்து அவரது வலது கையில் விஜயகாந்த் சிரித்த முகத்துடன் இருக்கும் உருவத்தை வரைந்துள்ளார்.
அதனை பிரேமலதா பார்த்து ரசிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.இந்த வீடியோவை தே.மு.தி.க.வினரும் பொது மக்களும் தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள் இதன் மூலமாக தனது கணவர் விஜயகாந்த் மீது பிரேமலதா வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு மீண்டும் வெளிப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.