தாயின் கை, கால்களை கட்டி வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார்..

கைது செய்யப்பட்டவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபராவார்.

இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது சந்தேக நபர் மது போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் சிறுமியின் தாயின் கை, கால்களை கட்டி அவரை சமையல் அறையில் தடுத்து வைத்து குறித்த சிறுமியை அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version