“ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. லால் சலாம் படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் ரூ. 3 கோடியே 55 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் உலகளவில் பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக லால் சலாம் வெளியீட்டை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது மகளும், படத்தின் இயக்குனருமான ஐஸ்வரியாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். “,

Share.
Leave A Reply

Exit mobile version