1963-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், வெளியான படம் குங்குமம். சிவாஜி கணேசன், சாரதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

தான் பாடிய ஒரு பாடலை விட்டுவிட்டு அதே பாடலை டி.எம்.சௌந்திரராஜனை வைத்து பதிவு செய்ய சொன்ன சிவாஜி கணேசனை தொடர்புகொண்ட பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், நீங்கள் பந்தி வையுங்கள், ஆனால் அடுத்தவர் சாப்பிட்ட இலையில் மற்றொருவருக்கு சாப்பாடு போடாதீங்க என்று காட்டமாக பேசியுள்ளார்.

1963-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், வெளியான படம் குங்குமம். சிவாஜி கணேசன், சாரதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். படத்தில், கண்ணதாசன் உட்பட 4 கவிஞர்கள் பாடல் எழுதியிருந்தனர்.

இந்த படத்தில் வரும் ‘’சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாறுவேடத்தில் அலைந்துகொண்டிருக்கும் சிவாஜி தமிழ் பண்டிதர் வேடத்தில் சாரதா வீட்டுக்கு வருவார். அந்த சமயத்தில் சாரதா ஒரு கச்சேரியில் பாடிக்கொண்டிருக்கும்போது பாதியில் அவருக்கு பாடல் மறந்து போகும்.

இதை கவனிக்கும் சிவாஜி அவருடன் இணைந்து அந்த பாடலை பாடி முடித்து வத்திருப்பார். சந்தானம் ஹீரோவாக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் கூட இந்த பாடல் வரும். டி.எம்.சௌந்ததிரராஜன், பி.சுசிலா பாடிய இந்த பாடல் பெரிய ஹிட் பாடலாக அமைந்த நிலையில், இன்றைய திரைப்படங்களிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த குரலில் இந்த பாடல் ஒலித்தால், எனக்கு மார்க்கெட் போய்விடும். கடந்த 12 வருடங்களா டி.எம்.எஸ்.தான் எனக்காக பாடுகிறார். அவரை வைத்து பாட வையுங்கள் என்று சொல்ல, முதலில் ஒப்புக்கொள்ளாத இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், மீண்டும் டி.எம்.எஸை வரவரழைத்து இந்த பாடல் பதிவை நடத்தியு்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version