கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 5 கோடி 80 இலட்சம் ரூபா பெறுமதியான 2 கிலோ 750 கிராம் தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர், வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் எனவும், அவர் விமான நிலையத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் விமான நிலையத்தில் உள்ள கழிவறை ஒன்றில் வைத்து குறித்து பொதியை சந்தேக நபருக்கு கொடுத்ததாகவும் குறித்த பொதியை விமான நிலையத்திற்கு வெளியே உள்ள நபரிடம் கொடுத்தால் 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கூறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version