சென்னை: அந்த 2 பெண்களை பார்த்ததுமே, ஆபீசர் கிறங்கி விழுந்துவிட்டார்.. ஆபீசருக்கு வயது 60 ஆகிறது.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்.. 60 வயதாகிறது.. மத்திய தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணிபுரிந்தவர்.. இப்போது ரிடையர் ஆகிவிட்டார். இவரது மனைவி கடந்த 2020ம் ஆண்டு இறந்துவிட்டார்.. இவருக்கு குழந்தைகள் இல்லை…
வளர்ப்பு பிள்ளை: அதனால், ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்த்து வருவதாக தெரிகிறது.. அந்த வளர்ப்பு பிள்ளையும் இப்போது வெளிநாட்டில் இருக்கிறாராம். அதனால், ஆனந்தன் மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு பென்ஷன் வந்து கொண்டிருக்கிறது.
தனி நபராக இருப்பதால், சமைப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அன்றாட பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.. அதனால், இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார்..
இதற்காக, திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டு, மறுமணம் செய்து கொள்ள பெண் வேண்டும் என்று கேட்டுள்ளார்.. இதற்காக முறைப்படி அந்த மையத்தில் பதிவு செய்தார்.
சரண்யா: இந்நிலையில், கடந்த 31ம் தேதி சரண்யா என்ற பெண், ஆனந்தனுக்கு போன் செய்துள்ளார்.. திருச்சி உறையூரை சேர்ந்தவராம் சரண்யா.. மேட்ரிமோனியலில் விளம்பரம் பார்த்ததாகவும், மறுமணம் செய்துகொள்ள தனக்கு சம்மந்தம் என்றும் சொன்னார்.. இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்பு, நேரில் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்..
தன்னை ஒரு பெண் கல்யாணம் செய்து கொள்ள போகிறார் என்றதுமே ஆபீசர் ஆனந்தனுக்கு தலைகால் புரியவில்லை.
சரண்யா தன்னை பார்க்க வீட்டுக்கு வரப்போகிறார் என்றதுமே, சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்.. உடனே சரண்யாவுக்கு தன்னுடைய வீட்டு அட்ரஸை தந்து, கிளம்பி வர சொன்னார்.. சரண்யாவும் அன்னைக்கு சாயங்காலமே, ஆனந்தன் வீட்டுக்கு வந்துவிட்டார்.
அவருடன் தன்னுடைய தோழியையும் அழைத்து வந்திருந்தார்.
சாயங்காலம்: சாயங்காலம் நேரம் என்பதால், இவர்கள் பேசி முடிப்பதற்கே இரவு நேரமாகிவிட்டது.
அதற்கு மேல் கிளாம்பாக்கத்துக்கு சென்று, பஸ் ஏறி திருச்சிக்கு போக வேண்டும் என்பதால், இரவு அங்கேயே தங்கி விட்டு, மறுநாள் சென்று விடுகிறோம் என்று ஆனந்தனிடம் 2 பெண்களும் சொல்லி உள்ளனர்..
ஆனந்தனும், அந்த 2 பெண்களையும் தங்கி கொள்ள சம்மதித்தார். நைட் 3 பேரும் உட்கார்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார்கள்.. உங்களுக்கு டீ போட்டு கொண்டு வரேன் என்று சொல்லிவிட்டு, சரண்யா நேராக கிச்சனுக்கு போனார்..
சுடச்சுட டீ போட்டு கொண்டுவந்து ஆனந்தனிடம் தந்தார். டீ குடித்துவிட்டு, கொஞ்ச நேரத்திலேயே ஆனந்தன் படுக்கையில் சாய்ந்துவிட்டார்.
மறுநாள் காலையில்தான் கண்விழித்து பார்த்தார்..
காஸ்ட்லி பொருட்கள்: ஆனால், 2 பெண்களும் காணவில்லை.. இரவெல்லாம் என்ன நடந்தது? என்று தெரியாமல் பதறிப்போன ஆனந்தன், உடனே பீரோவை திறந்து பார்த்தார்..
அங்கே 14 சவரன் நகை மிஸ்ஸிங்.. இதைத்தவிர, வேறு சில காஸ்ட்லி பொருட்கள் இருந்திருக்கின்றன..
ஆனந்தன் செல்போன் உட்பட எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டனர் அந்த பெண்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தன், உடனடியாக திருவொற்றியூர் போலீசுக்கு ஓடினார்..
நடந்த சம்பவம் குறித்து புகார் செய்யவும், போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்தனர்..
யார் அவர்கள்: உடனடியாக ஆனந்தன் வீட்டு பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்..
அந்த 2 பெண்கள், ஆனந்தன் வீட்டிற்குள் நுழைவதும், வெளியேறியதும் பதிவாகியிருந்தது. அவர்கள் யார் என்று தெரியவில்லை..
2 பேரையுமே வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள் போலீசார்.. மறுமணம் செய்ய ஆசைப்பட்ட ஆனந்தனோ, இடிந்து போய் உட்கார்ந்துள்ளாராம்…!!
Post Views: 128