குளியாப்பிட்டி – உடுபத்த பிரதேசங்களுக்கு இடையில் பல்லேவெல பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக வேன் ஒன்று லொறியின் உதவியுடன் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் குறித்த லொறியானது முச்சக்கரவண்டியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த தம்பதியினர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வேனை இழுத்துச்சென்ற லொறியானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version