தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் நடந்துள்ளது.

தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து கண்ணியமாக மரணிக்க செய்வதை பல்வேறு நாடுகளும் அனுமதித்து உள்ளது.

இந்நிலையில் உலகில் முதன்முறையாக 2002ம் ஆண்டு கருணை கொலைக்கு நெதர்லாந்து நாடு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது.

அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிறிஸ்டியன் ஜனநாயக அப்பீல் கட்சியின் தலைவருமான டிரைஸ்-வான்-ஆகட் ( 94 வயது), இவர் 1977-ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவரது மனைவி இகுனி (93 வயது) இவரும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு டிரைஸ்வான் ஆகட்டிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனை பார்த்து மனவேதனை அடைந்த இகுனி, நெதர்லாந்து சட்டப்படி தங்களை கருணை கொலை செய்யுமாறு கோரிக்கைவிடுத்தார்.

இதனை ஏற்று அரசு சட்டவிதிகளின் கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கும் விஷ ஊசி செலுத்தப்பட்டது. அப்போது இருவரும் கை கோர்த்தபடி மரணித்தனர். இருவரும் இணைந்தபடி மரணித்திருப்பது பார்ப்போரை நெகிழ செய்தது

Share.
Leave A Reply

Exit mobile version