கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் புளியம்பொக்கணை பகுதியிலிருந்து மிதிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதிய போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதன்போது 02 எருமை மாடுகளும் உயிரிழந்துள்ள நிலையிலும் இரண்டு மாடுகள் காயமடைந்துள்ளன.

இதே வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதிய எருமை மாட்டுடன் மோதியதால் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version