யாழ்ப்பாணத்தில் நோயாளர் காவு வண்டியில் மோதி விபத்துக்குள்ளான வர்த்தகர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ் தர்மதாஸ் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அண்மையில் யாழ். நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த இவர், தனது வர்த்தக பணிகளை முடித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் நோயாளர் காவு வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version