“பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்த தகவலை அவரது தங்கையான அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.இயக்குநர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
அதில் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
தற்போது இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவும் ரோஹித்தும் ஆறு மாதங்கள் கூட ஒன்றாக சேர்ந்து வாழவில்லை.
அதனால் ரோஹித்தும் ஐஸ்வர்யாவும் சட்டப்படி மணமுறிவு பெற்று பிரிந்தனர்.இப்போது, ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளார் எனற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்”,