சேலையை கட்டாமல் வந்த ஆசிரியை ஒருவர், விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அந்த ஆசிரியை. கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிராகம ஆசிரியர் கலாசாலையின் மோடியுல மத்திய நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை(18) வந்திருந்த ஆசிரியையே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர்களின் சேவை உயர்வுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திறன் வரம்புகளை முழுமைப்படுத்துவதற்கே அந்த ஆசிரியை வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த மத்திய நிலையத்தின் முகாமையாளர். அந்த ஆசிரியையை சேலை கட்டாமல் வந்திருந்தமையால் அங்கிருந்து விட்டிவிட்டார். இது தொடர்பிலேயே அந்த ஆசிரியை முறைப்பாடு செய்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version